உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருநீலகண்ட நாயனார் குருபூஜை

திருப்பூர்:திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழாவில், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பிரகார உலா நிகழ்ச்சிகள் நடந்தது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, திருநீலகண்ட நாயனார், சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர். சிவனடியாருக்கு திருவோடு தயாரித்து கொடுக்கும் சேவை செய்த வந்த இவர், சிவபெருமான் திரு விளையாடல் நடத்தி, தை விசாகம் நாளில் தன்னுடன் ஆட்கொண்டார்.தை மாத விசாக நட்சத்திர நாளான நேற்று, திருப்பூர் சிவாலயங்களில் நேற்று குருபூஜை நடந்தது.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அறுபத்து மூவர் மண்டபத்தில் இருக்கும் திருநீலகண்ட நாயனாருக்கும், உற்சவமூர்த்திக்கும் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட திருநீலகண்டநாயனார் உற்சவ மூர்த்தி, உள் பிரகாரத்தில் உலாவந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ