உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்து அமைப்புகளுக்கு போலீசார் "அட்வைஸ்

இந்து அமைப்புகளுக்கு போலீசார் "அட்வைஸ்

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சிகளில், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு, இந்து அமைப்புகளுக்கு போலீசார் வலியுறுத்தினர்.விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது; இன்ஸ்பெக்டர் குமார் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத அன்னையர் முன்னணி, பாரத் சேனா ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.'கடந்தாண்டு சிலைகள் வைத்த இடங்களில் மட்டுமே இம்முறையும் சிலைகள் வைக்க வேண்டும்; சிலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது; கடந்த முறை அனுமதித்த எண்ணிக்கையில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதிக்கப்படும். ஊர்வல பாதையிலும் மாற்றம் செய்ய அனுமதி இல்லை. சிலைகளை அதிக உயரத்தில் அமைக்கக் கூடாது. ஐந்தடி உயரத்தில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும்.'சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களிலும், விசர்ஜன ஊர்வலத்தின் போதும் பிற மதங்களை துன்புறுத்தும்படியான கோஷங்களையோ, பாடல்களையோ பாடக்கூடாது. சிலைகள் வைக்கும் இடங்களில், தீயணைப்பு சாதனங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்; அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள், சிலைகளை பாதுகாக்க வேண்டும்; சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில், சிலைகளை தயார் செய்ய வேண்டும்,' என, அறிவுரை வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது; விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து போலீஸ் தரப்பில் இந்து முன்னணியினருக்கு அறிவுறுத்தப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ