உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளியை தாக்கி வழிப்பறி திருநங்கையர் மூன்று பேர் கைது

தொழிலாளியை தாக்கி வழிப்பறி திருநங்கையர் மூன்று பேர் கைது

பல்லடம் : பல்லடத்தில், தொழிலாளி ஒருவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கையர் மூன்று பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ், 40; சமையல் தொழிலாளி. நேற்று முன்தினம், சமையல் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்த திருநங்கையர் மூன்று பேர், சதீஷை வழிமறித்து, அடித்து துன்புறுத்தி, அவரிடம் இருந்த, 5 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.இது தொடர்பாக, சதீஷ் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பல்லடத்தைச் சேர்ந்த ராஜாராம் (எ) தேஜூ, 24 கற்பகம், 28 மற்றும் ரமேஷ் (எ) பிரியா 28 ஆகிய மூன்று திருநங்கையரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அடிக்கடி இது போன்ற நுாதன வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் தனியாக வரும் நபர்களிடம், மிரட்டி பணம், நகைகளை பறிப்பது வாடிக்கையாக உள்ளது.சில பெண்களும் கூட இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை