உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்தில் விவசாய கருவிகள்

மானியத்தில் விவசாய கருவிகள்

உடுமலை : உடுமலை கல்லாபுரத்தில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில், வேளாண்மை தொழில் நுட்ப முகமை திட்டத்தின் கீழ் கல்லாபுரம் பகுதியில் செம்மை நெல் சாகுபடி செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் களை எடுக்கும் கருவி கோனோவீடர் வழங்கப்பட்டது. வேளாண்மை துறை துணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன் கருவிகளைவழங்கினார். வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) திருமகள்ஜோதி, உதவி வேளாண் அலுவலர் வைரமுத்து மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி