உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஆலோசனை

வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஆலோசனை

திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக, மாநில உள்ளாட்சி தேர்தல் பிரிவு செயலாளருடன் 'வீடியோ கான்பரன்சிங்'கில் நேற்று ஆலோசனை நடந்தது.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்., மாதம் நடைபெறுகிறது. இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள் ளன. ஊராட்சிகளில் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட வார்டுகள் ஒன்றிணைக்கப்பட்டு, வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வார்டுகள் திருத்திஅமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.அதில், உள்ளாட்சி அமைப்புக்கும், தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யிலான ஆலோசனை நேற்று நடந்தது. உள்ளாட்சி தேர்தல் பிரிவு மாநில செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகம், சென்னையில் இருந்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள அதி காரிகளுக்கு 'வீடியோ கான்பரன்சிங்'கில் விளக்கம் அளித்தார்.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (ஊராட்சி மற்றும் பேரூராட்சி), மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் தேர்தல் பிரிவு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பங்கேற்றனர்.புதிய நடைமுறைப்படி தயாரிக்க வேண்டிய வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் அதை தயாரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ