உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் துறையை ஊக்குவிக்கும் பட்ஜெட் தமிழக அரசை பாராட்டுகிறது, "சிஸ்மா

தொழில் துறையை ஊக்குவிக்கும் பட்ஜெட் தமிழக அரசை பாராட்டுகிறது, "சிஸ்மா

திருப்பூர் : 'சிறு, குறு தொழிலாளர்களுக்கு மூன்று சதவீதம் வட்டி கடன் தள்ளுபடி செய்துள்ளதால், தொழில் புரிவோர், இளம் தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படுவர்,' என, தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு 'சிஸ்மா' சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.இச்சங்க பொது செயலாளர் பாபுஜி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூன்று சதவீத வட்டி கடன் தள்ளுபடி இடம் பெற்றிருப்பது, தொழில் துறையினருக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. எவ்வித ஆவணங்களும் இல்லாமல், நிபந்தனையற்ற கடன் வழங்கப்பட்டால், சிறு, குறு தொழிற்சாலைகள் விரைவில் வளர்ச்சி அடைய வாய்ப்பாக அமையும். 2,500 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம், போக்குவரத்து சுலபமாகும் வாய்ப்புள்ளது.மின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 22 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில் 3,800 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்வதன் மூலம், திருப்பூரை போன்ற பின்னலாடை தொழில் நகரங்களின் வளர்ச்சி மேம்பாடு அடையும்; சிறு, குறு தொழிற்சாலைகளும், புதிதாக தொழில் துவங்குவோரையும் ஊக்குவிக்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்கத்தக்கது.ரூ.194 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் வகையில், நோய் கண்டறியும் கருவிகள், வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டங்கள், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்; குறிப்பாக, முதியோர், மாவட்ட புறநகர் பகுதிகளில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பறக்கும் பாலம் அமைக்கும் திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்தனர்; பட்ஜெட்டில் பறக்கும் பாலம் திட்டம் இடம் பெறாதது, அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது; கலெக்டர் அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கியது மன ஆறுதல் அளிக்கிறது. தொழில் துறையினரை மேம்படுத்தும் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை 'சிஸ்மா' வரவேற்கிறது, என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை