உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் இன்று முதல்

திருப்பூரில் இன்று முதல்

திருப்பூர்:திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.'அம்ரூத்' திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து திருப்பூர் தெற்கு ஸ்டேஷன் வரை இன்று (11ம் தேதி) இரவு முதல் 14ம் தேதி இரவு வரை என போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.இதனால், அந்நாட்களில் தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் வழியாக மற்றும் காங்கயம் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக சி.டி.சி., கார்னர் - ராஜிவ் நகர் - வளம் பாலம் வழியாக செல்லும்படி மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ