உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் இந்திய மருத்துவர் தின விழா போட்டி

உடுமலையில் இந்திய மருத்துவர் தின விழா போட்டி

உடுமலை : உடுமலையில், மருத்துவர் தின விழாவையொட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடந்தது. 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த தமிழ் கட்டுரைப்போட்டியில், மாணவி சந்தியா முதலிடமும், ஆங்கில கட்டுரை போட்டியில், மாணவி காவ்யா முதலிடமும், 10, 11ம் வகுப்புகளுக்கான ஆங்கில கட்டுரை போட்டியில், சைனி காருண்யா முதலிடமும் பெற்றனர். வினாடி வினா போட்டியில், பிரசாத் குழுவினரும், குழு நடனப்போட்டியில், கே.ஜி.,பிரிவில், கார்த்திகா குழுவினரும் முதல் பரிசு பெற்றனர். 2ம் வகுப்பு முதல் 4ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு நடந்த போட்டியில், இந்துமதி குழுவினர், 6-9ம் வகுப்புகளுக்கான பிரிவில், ஜவஹர் குழுவினர் முதல் பரிசும் பெற்றனர். தனி நபர் நடனப்போட்டியில், அருணா, இரண்டாமிடத்தையும், விஜயமாதவி ஆறுதல் பரிசும் பெற்றனர். ஓவிய போட்டியில், நிதிஸ் நந்தா இரண்டாமிடமும், பாட்டுப்போட்டியில், சுபநிசிலா இரண்டாமிடமும், ஹேமவர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர். ஷீபா பர்வீன், ஸ்வேதா, வித்யா ஆகியோர் ஆறுதல் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை