உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முள்ளெலி வனத்துறையிடம் ஒப்படைப்பு

முள்ளெலி வனத்துறையிடம் ஒப்படைப்பு

மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில் மீட்கப்பட்ட முள்ளெலி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மடத்துக்குளம் உடுமலை ரோட்டில் கேடிஎல் மில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பந்து போல் இருப்பதை சிலர் பார்த்துள்ளனர். சிறிது அசைவு தெரியவே அருகில் சென்று பார்த்த போது வனப்பகுதியில் காணப்படும் முள்ளெலி என்று தெரிந்தது. இது உடல் முழுவுதும் முட்கள் அடர்ந்து காணப்படும். எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, தனது உடலை சுருக்கி பந்து போல் வைத்து கொள்ளும் தன்மையுடையது. தற்போது இந்த வகை முள்ளெலிகள் அரிதாக காணப்படுகிறது. இதை மீட்ட பசுமைமாறா இயற்கை பாதுகாப்பு கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி