உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜவுளித்துறைக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது :"சிஸ்மா குற்றச்சாட்டு

ஜவுளித்துறைக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது :"சிஸ்மா குற்றச்சாட்டு

திருப்பூர் : 'வங்கதேச ஜவுளி இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்,' என 'சிஸ்மா' சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.இச்சங்க பொது செயலாளர் பாபுஜி வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும், பின்னலாடை துறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. திருப்பூர் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மும்பை, கோல்கத்தா, சூரத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், உள்நாட்டு வர்த்தகத்திலும், ஏற்றுமதி வாய்ப்புகளை பெற முயற்சிக்கப்படுகிறது.உள்நாட்டு வர்த்தகத்தில் வரியை பெற்றுக்கொண்டும், ஏற்றுமதி வர்த்தகத்தில் அன்னிய செலாவணியை பெற்றுக்கொண்டும் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. 'சி' பாரம் பிரச்னைக்கு நீண்ட நாட்கள் போராடியும், தற்போது 'சி' பாரத்துக்கு தீர்வு கிடைக்காமல், பின்பற்றி வருகிறோம். மத்திய அரசு, 10 சதவீத கலால் வரியை அறிவித்து, தொழிலை பாதிப்படைய செய்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஜவுளிகளுக்கு வரிச்சலுகை அளிப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். பின்னலாடை துறையும், ஜவுளி துறையும் உள்நாட்டு வர்த்தகத்தில் பெரிய சரிவை சந்திக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதனால், 30 முதல் 40 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டு, சிறு, குறு உற்பத்தியாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படும் அபாயத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். புதிய வரியை துணிகளுக்கு மாநில அரசு விதித்ததும், தொழில் துறையினரின் கருத்தை ஏற்று, உடனடியாக ரத்து செய்தது. மத்திய அரசு விதித்த வரியை ரத்து செய்யக்கோரி, நாடு முழுவதும் போராட்டம் நடத்தியும், எந்த பலனும் கிடைக்கவில்லை. மத்திய அரசு, வங்கதேசத்தின் மீது காட்டும் அக்கறையை, ஆயத்த ஆடைத்துறையினர் மீது காட்டாததை தொழில் துறையினர் புரிந்துகொள்வர். தொழில் துறையினரின் நெருக்கடியை உணர்ந்து, கலால் வரியை முற்றிலும் நீக்கி, தொழில் துறை வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ