உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தலில் போட்டி: முஸ்லிம் லீக் முடிவு

தேர்தலில் போட்டி: முஸ்லிம் லீக் முடிவு

திருப்பூர் : திருப்பூர் மேயர் மற்றும் 30 வார்டுகளில் போட்டியிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது. திருப்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சிராஜூதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையத் முஸ்தபா வரவேற்றார். கூட்டத்தில், திருப்பூர் மேயர் பதவிக்கும், 30க்கும் மேற்பட்ட வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வார்டுகளில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிக்கு ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சிக்கு வழங்கிய இலவச அரிசி, பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு மட்டும் என அறிவித்து, 60 சதவீத பள்ளிவாசல்கள் புறக்கணிக்கப்பட்டன. இனி முறையாக வழங்கப்பட வேண்டும், என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ