உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கிரிக்கெட் போட்டி "ஹேண்ட்லூம் பாய்ஸ் வெற்றி

மாவட்ட கிரிக்கெட் போட்டி "ஹேண்ட்லூம் பாய்ஸ் வெற்றி

அவிநாசி : அவிநாசியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், இடுவம்பாளையம் அணி வெற்றி பெற்றது.அவிநாசி வட்டார இளைஞர் காங்., சார்பில்கிரிக்கெட் போட்டி நடந்தது. இடுவம்பாளையம் ஹேண்ட்லூம் பாய்ஸ் அணியும், வீரபாண்டி வர்ஷா கிரிக்கெட் கிளப்பும் மோதின. கவுன்சிலர் பரமசிவம் துவக்கி வைத்தார். இடுவம்பாளையம் அணி வென்று, கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கும், வீரர்களுக்கும், அவிநாசி பேரூராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். இளைஞர் காங்., எம்.பி., தொகுதி துணை தலைவர் சுந்தரமூர்த்தி, நடராஜ், சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் லோகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை