உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி விலை உயரும்

தக்காளி விலை உயரும்

உடுமலை : உடுமலையில், தக்காளி விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், வரும் காலங்களில் உயரும் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. வைகாசி பட்டத்தில் நடவு செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூரில் தக்காளி விளைச்சல் நன்றாக இருந்த போதிலும், முகூர்த்த சீசன் என்பதால் சில நாட்களாக தக்காளிக்கு நல்ல கிராக்கி நிலவியது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 600 ரூபாய்க்கு விற்றது. தற்போது திடீரென விலை பாதியாக குறைந்து, 300 ரூபாய்க்கு விற்கிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து தக்காளி வரத்து நிலவுவதால், பிற மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்து, விலை சரிவை சந்தித்துள்ளது. வரும் நாட்களில் இயல்பு நிலை திரும்பி தக்காளிக்கான தேவை உயரும். அப்போது விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை