உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து விதி மீறல்; போலீசார் வழக்குப்பதிவு

போக்குவரத்து விதி மீறல்; போலீசார் வழக்குப்பதிவு

பல்லடம்; பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், விதிமுறை மீறி வாகனங்களை இயக்கியதாக கூறி, போலீசார், 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். கடந்த, 3ம் தேதி ஓடாநிலையில், தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க, பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், நுாற்றுக்கணக்கான வாகனங்களில் சென்றனர். அவ்வகையில், பல்லடம் வழியே சென்ற சிலர் போக்குவரத்து விதிகளை மீறி, விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக கூறி, பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், வாகனங்களை அதிவேகமாக ஓட்டியது, போக்குவரத்து விதி மீறல், வாகன பதிவு எண்களை மறைத்து இயக்கியது மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. வாகன பதிவு எண்களின் அடிப்படையில், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகனங்களை இயக்கியது யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை