உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வந்தே பாரத் ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

வந்தே பாரத் ரயில் இயக்கம் பிப்., இறுதி வரை நீட்டிப்பு 

திருப்பூர் : கடந்தாண்டு நவ., 28 முதல், கோவையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்தோறும் வந்தே பாரத் ரயில் (எண்:06035) இயக்கப்பட்டு வருகிறது. காலை, 7:10 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில் மதியம், 2:15 மணிக்கு கோவை வந்தடைகிறது; மறுமார்க்கமாக மதியம், 3:05 மணிக்கு கோவையில் புறப்பட்டு, இரவு, 9:50 மணிக்கு சென்னை சென்று சேர்கிறது.முந்தைய அறிவிப்பின்படி, நேற்று முன்தினத்துடன் (30ம் தேதி) 'வந்தே பாரத் ரயிலுக்கான இயக்கம் முடிந்த நிலையில், பிப்., 6 முதல், 27ம் தேதி வரையிலான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி. பிப்., 27ம் தேதி வரை, தொடர்ந்து செவ்வாய்தோறும் 'வந்தே பாரத'் ரயில் இயங்கும்.தற்போது, புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் (எண்: 20644) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சேலத்தில் இருந்து எங்கும் நிற்காமல் சென்னை செல்கிறது. அதேநேரம், செவ்வாய்தோறும் இயக்கப்படும் 'வந்தேபாரத்' ரயில் சேலம் கடந்த பின் ஜோலார்பேட்டை, காட்பாடியில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்