உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் அபாரம்

வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் அபாரம்

திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர், அவிநாசி சாலை, ஆஷர் நகர் பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவியர் பங்கேற்றனர். திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான சிலம்பம், 19 வயதினர் மாணவியர் பிரிவில் 'சிலம்பம் - 60' போட்டியில் மாணவி மந்த்ரா முதலிடமும், 'சிலம்பம் -45' போட்டியில் சந்தோஷினி மூன்றாம் இடமும் பெற்றனர். பிஷப் பள்ளியில் ஏழு குறு மைய அளவிலான வெற்றியாளர்கள் பங்கேற்ற மாவட்ட 'சிலம்பம் -60' மாணவியர் பிரிவுப் போட்டியில் மாணவி மந்த்ரா முதல் பரிசு பெற்று மாநிலப்போட்டிக்கு தேர்வானார். முதல்வர் கோப்பையில் சிலம்பத்தில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை