உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வித்யாசாகர் பள்ளி ஆண்டு விழா

 வித்யாசாகர் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்: திருப்பூர், கூலிபாளையத்திலுள்ள இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கூலிபாளையம் வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா 'அரீனா ஆர்டியம்' என்ற தலைப்பில் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. கடந்த ஒரு மாதமாக, மழலையர் முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது. இதில், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது. தங்கள் திறமையை வெளிப்படுத்தி, போட்டியில் வென்றனர். விழாவின் நிறைவு நாளில், முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமை வகித்து, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, விகாஸ் வித்யாலயா கல்விக்குழுமங்களின் சேர்மன் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். பள்ளி செயலாளர் சிவப்பிரியா, தலைமையாசிரியர் சசிரேகா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழா நிறைவாக, பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சி பெற்றோர் உள்ளிட்ட பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ