உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவியிடம் அத்துமீறல்; பள்ளி ஆசிரியர் கைது

மாணவியிடம் அத்துமீறல்; பள்ளி ஆசிரியர் கைது

திருப்பூர்: திருப்பூரில், பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்தனர்.மதுரையை சேர்ந்தவர் அழகுசுந்தரம், 33. திருப்பூரில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில், பிளஸ் 1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, சமூக வலைதளம் மூலம் 'சாட்' செய்து வந்தார். மாணவியை தனது வீட்டுக்கு அழைத்த ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரிய வந்தது. திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அழகுசுந்தரம் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி