மேலும் செய்திகள்
பள்ளியில் விளையாட்டு விழா மாணவர்களுக்கு பரிசு
7 minutes ago
பிரதான கால்வாய் உடைப்பு தொடர்கதை; நிதி ஒதுக்காமல் வேதனை
22 minutes ago
ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
23 minutes ago
போக்குவரத்து நெரிசல்
24 minutes ago
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளில், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்கள் ஆய்வு செய்து, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவு அடிப்படையில், தொகுதி வாரியாக, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வீடுகள் தோறும் தேர்தல் கமிஷன் வழங்கிய படிவங்கள் வினியோக பணி நடந்து வருகிறது. உடுமலை தொகுதியிலுள்ள, ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 771 ஆண்கள், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 116 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2 லட்சத்து, 68 ஆயிரத்து, 918 வாக்காளர்களுக்கு, தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட, 294 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர். அதே போல், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 739 ஆண்கள், ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 338 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தமுள்ள, 2 லட்சத்து, 40 ஆயிரத்து, 95 வாக்காளர்களுக்கு, 287 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக, பாகம் வாரியாக படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து பெறப்பட்டு வருகிறது. பெறப்படும் படிவங்களை அவ்வப்போது, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பணியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. வீடுகள் தோறும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் படிவங்கள் வழங்கப்பட்டு, கேட்கப்பட்ட தகவல்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. இதில், பாகம் எண், பூத் எண், வாக்காளர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா, என ஆய்வு செய்யப்பட்டு, தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. வரும், டிச., 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, விடுபட்டவர்களை இணைக்க, ஜன., 8ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பரிசீலனை, கள ஆய்வு முடிந்து, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பிப்., 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.
7 minutes ago
22 minutes ago
23 minutes ago
24 minutes ago