உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

மக்களுக்காக தெருமுனைக்கு வந்துவிட்டோம்: பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

திருப்பூர்:''திருப்பூர் மக்களுக்காக, இன்று தெருமுனையில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து, தொடர் தெருமுனை பிரசார கூட்டம், நேற்று மாலை, ராக்கியாபாளையத்தில் துவங்கியது.ராக்கியாபாளையம் பிரிவை தொடர்ந்து, சி.டி.சி., ரவுண்டானா பகுதியில், தெற்கு மத்திய பகுதி சார்பில், தெருமுனைபிரசாரம் நடந்தது. ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், பகுதி செயலாளர் கண்ணப்பன், ஏ.டி.பி., மாவட்ட செயலாளர் கண்ணபிரான், நல்லுார் பகுதி செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், இரவு, பகலாக வேலை செய்து கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. தற்போது, ஒரு 'ஷிப்ட்' வேலையே கிடைக்காமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.தி.மு.க., ஆட்சியில், திருப்பூர் வளர்ச்சிக்கான எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே, பெயர் மாற்றி செய்து கொண்டிருக்கின்றனர்.மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அ.தி.மு.க., இன்று தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை வந்துள்ளது. மக்களுக்காக தெருமுனையில் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.தெற்கு தொகுதியில் இன்று, தட்டான்தோட்டம், கே.வி.ஆர்., நகர் பகுதிகள்; திருப்பூர் வடக்கு தொகுதியில், எஸ்.ஏ.பி., தியேட்டர் காந்தி நகர் பகுதி, வேலம்பாளையம், திலகர் நகர் பகுதி, போயம்பாளையம், தொட்டிபாளையம் பிரிவு பகுதிகளில் இன்று, தெருமுனை பிரசாரம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை