உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விசைத்தறியாளர்கள் நாளை ஆலோசனை

விசைத்தறியாளர்கள் நாளை ஆலோசனை

பல்லடம், : திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:கடந்த ஆண்டு, பிப்., 16 அன்று, ஜவுளி உற்பத்தியாளருடன் கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உயர்த்தப்பட்ட கூலியை, ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் குறைத்து வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.எனவே, ஒப்பந்தம் செய்தபடி கூலியை உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சுக்கம்பாளையம் சின்னம்மன் கோவில் மண்டபத்தில், நாளை (12ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை