உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

 பாதயாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

உடுமலை: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, விழிப்புணர்வு பாத யாத்திரை செல்லும் சமூக ஆர்வலருக்கு, உடுமலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா. வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பாத யாத்திரை செல்கிறார். இவருக்கு உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, அபெக்ஸ் சங்கம் சார்பில், வரவேற்பு கொடுக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட கவர்னர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சீதாராமன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்று, அவரது பாதயாத்திரைக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ