உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கு சென்று வேட்டி மாற்றுவது? கரை வேட்டியுடன் வந்த திமுக நபர் வாக்குவாதம்.

எங்கு சென்று வேட்டி மாற்றுவது? கரை வேட்டியுடன் வந்த திமுக நபர் வாக்குவாதம்.

பல்லடம் அடுத்த, மாதப்பூர் ஓட்டுச்சாவடி எண் 313ல் திமுக கட்சி கரை வெட்டி அணிந்து வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி வேட்டியை மாற்றிக் கொண்டு வருமாறு கூறினர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்நபர், எங்கு சென்று வேட்டியை மாற்றுவது? நான் ஓட்டு போட்டு தான் ஆவேன் என்றார். மேலும், அப்படியெல்லாம் விட முடியாது என்றும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவரை அழைத்து வந்தார். போலீசார் அப்போதும் விட மறுக்க. மீண்டும் வாக்குவாதம் நடந்தது. தேர்தல் விதிமுறை இருக்க உங்களுக்கே இது தெரிய வேண்டாமா? நாங்கள் எங்கிருந்தோ பாதுகாப்பு பணிக்கு வருகிறோம். எங்களிடம் வாக்குவாதம் செய்தால் நாங்கள் என்ன செய்வது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறினர். ஆவேசத்துடன் வந்த திமுக பிரமுகர் இறுதியில் காங்கேயத்தில் இருந்து வருவதாகவும், இப்போது எங்கு சென்று வேட்டி மாற்றுவது என்றும் தயவு செய்து அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுக்க, வேறு வழியின்றி போலீசார் அவரை அனுமதித்தனர். இதனால். ஓட்டுச்சாவடியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

rama adhavan
ஏப் 19, 2024 20:53

மறைவிடத்தில் சென்று வேட்டியை கரையை உள்ளாகவும் உள்ளை வெளியாகவும் மாற்றிக் கட்டி ஒட்டளித்தவுடன் வந்து திருப்பி கட்டி இருக்கலாமே? இவர் மீது விதிமுறை மீறல் நடவடிக்கை தேவை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை