உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைப்பு சாரா தொழிலாளருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுமா?

அமைப்பு சாரா தொழிலாளருக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுமா?

திருப்பூர்:சி.ஐ.டி.யு., ஊத்துக்குளி ஒன்றிய பொது தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நேற்று நடந்தது.சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பொறுப்பு செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பொருளாளர் மணியன், வரவு -செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி மகாசபையை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் பேசினார். மா.கம்யூ., கட்சி தாலுகா செயலாளர் கொளந்தசாமி, விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் பிரகாஷ் வாழ்த்தி பேசினர்.புதிய தலைவராக பெரியசாமி, செயலாளராக காமராஜ், பொருளாளராக மணியன், துணை தலைவராக சேகர், துணை செயலாளராக சக்திவேல் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, பொங்கல் போனசாக, 3000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை