உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூக்கள் விலை குறையுமா?  பெண்கள் எதிர்பார்ப்பு

பூக்கள் விலை குறையுமா?  பெண்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்;இம்மாத துவக்கம் முதல் பூ விலை குறையாமல், உயர்ந்தே வருகிறது. 1.5 டன் முதல், இரண்டு டன் மல்லிகை பூ வந்த மார்க்கெட்டுக்கு, 100 முதல், 200 கிலோ, மல்லிகை பூ மட்டுமே வருவதால், கிலோ, 1,600 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்கப்படுகிறது.மல்லிகை வாங்க வரும் பலர் விலை உயர்வால், முல்லை பூவை தேடுகின்றனர். இதனால், வழக்கமாக, 400 முதல், 600 ரூபாய்க்கு விற்கப்படும் முல்லை கிலோ, ஆயிரம் ரூபாயாகியுள்ளது.மல்லிகை, முல்லை விலை உயர்வால், காக்கடா பூ, கிலோ, 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. 250 கிராம், 400 ரூபாய்க்கும், 100 கிராம், 150 ரூபாய் வரையும் மல்லிகை பூ விற்பதால், பூ வாங்கி கட்டி விற்கும் வியாபாரிகள் கூட ஆர்வம் காட்டுவதில்லை.நேற்று ஜாதிமல்லி, 800, செவ்வந்தி, 120, அரளி, 200, பட்டுப்பூ, 100 ரூபாய்க்கு விற்றது. ஆங்கில புத்தாண்டு துவங்கியது முதல் பூ விலை தொடர்ந்து உயர்ந்தே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு முன்பாக விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.பூ வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'மார்கழி நிறைவு தருவாயை எட்டிய போதும், பனியின் தாக்கம் குறையவில்லை. பத்து முதல், 12 டன் பூ வந்த மார்க்கெட்டுக்கு, ஆறு டன் பூ வருவது பெரியதாக உள்ளது. பூ வரத்து உயராததால், பூ விலையை குறைக்க முடியவில்லை. வெயில் வந்தால் தான் பூ வரத்து மாறும்; விலையும் குறையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ