உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சத்குருவின் மிராக்கிள் ஆப் மைண்ட் தியானத்தில் மூழ்கிய தொழிலாளர்கள்

 சத்குருவின் மிராக்கிள் ஆப் மைண்ட் தியானத்தில் மூழ்கிய தொழிலாளர்கள்

திருப்பூர்: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, எளிதாக தியானப் பயிற்சியை, ஏழு நிமிடங்களில் செய்யும் வகையில் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். திருப்பூர் 'நிப்ட் டீ' கல்லுாரியில் கடந்த அக். மாதம், செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட தொழிற்துறையினர் பலர் தங்கள் தொழிலாளர்களுக்கு இதை அறிமுகப்படுத்து வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, நியூ திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் வளாகத்தில் செயல்படும் எஸ்.ஆர்.ஜி., நிறுவனத்தில் பணியாற்றும் 275 தொழிலாளர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து,நேற்று தியானப் பயிற்சியில் ஈடுபட்டனர். தியானப்பயிற்சியை எந்த கட்டணமின்றி பயிற்றுவிக்க ஈஷா யோகா மையம் அறக்கட்டளையினர் தயாராக உள்ளனர். மேற்கொள்ள விரும்புவோர், 83000 29000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி