உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்

யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்

திருப்பூர்:கொங்குவள நாட்டில் பாடல் பெற்றதும், முதன்மைச் சிறப்பு வாய்ந்ததுமாகிய, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம், பிப்., 2ம் தேதி நடக்க உள்ளது. திருமாளிகை பத்தி, நீராழி பத்தி, கல் தரைத்தளம் அமைப்பது போன்ற பல்வேறு திருப்பணிகள் செய்து, கும்பாபிேஷகம் விமரிசையாக நடக்க உள்ளது.கும்பாபிேஷகத்துக்கு, அரண்மனை யாகசாலை வளாகம், 78 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி மூத்தபிள்ளையார் வழிபாடும், நிலதேவர் வழிபாடும் நடந்தது. அதனை தொடர்ந்து, இன்று யாகசாலை வேள்வி பூஜைகள் துவங்குகின்றன.காலை, 9:00 மணிக்கு யாகசாலை அழகு பெற செய்யும் பணிகள் துவங்குகின்றன; திருவருட் சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்து, மாலை, 7:00 மணிக்கு முதல்கால வேள்வி பூஜைகள் விமரிசையாக துவங்குகிறது. நிறையாகுதி, பேரொளி வழிபாடு, மலர் போற்றுதல், திருமுறை விண்ணப்பம், பேரொளி ஆராதனையை தொடர்ந்து, அருட்பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து, நாளை இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்விபூஜைகள் நடக்கின்றன. வரும், 1ம் தேதி வரை, ஏழு கால வேள்வி பூஜைகளை தொடர்ந்து, பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது, பிப்., 2ம் தேதி அதிகாலை, எட்டாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, அவிநாசியப்பர், பெருங்கருணாம்பிகை அம்மன் கும்பாபிேஷகம், காலை, 9:15 மணி முதல், 10:15 மணிக்குள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி