உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கஞ்சாவுடன் வாலிபர் கைது

 கஞ்சாவுடன் வாலிபர் கைது

அவிநாசி: அவிநாசி, பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவிநாசி - திருப்பூர் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஷா என்பவரிடம் சோதனை செய்தபோது இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !