உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / காட்டாற்றில் சிக்கி சிறுவன் பலி அண்ணனை தேடும் பணி தீவிரம்

காட்டாற்றில் சிக்கி சிறுவன் பலி அண்ணனை தேடும் பணி தீவிரம்

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செங்கம் அருகே ஜவ்வாது மலை அடிவார கிராமமான துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன், 39, என்பவரின் மகன்கள் கதிரேசன், 6, அகிலேஷ், 5, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே இருந்த ஓடையில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். கோவிந்தராஜன் அவர்களை தேடிய நிலையில், நேற்று காலை அகிலேஷ் உடல் அப்பகுதியில் கரை ஒதுங்கியது. தொடர்ந்து, கதிரேசனை தேடும் பணியில், செங்கம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை