உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / போனில் குடிநீர் பிரச்னை புகார்; இணைப்பை துண்டித்த கமிஷனர்

போனில் குடிநீர் பிரச்னை புகார்; இணைப்பை துண்டித்த கமிஷனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சி சேர்மனாக தி.மு.க.,வை சேர்ந்த நிர்மலா உள்ளார். நகராட்சி கமிஷனராக இரு நாட்களுக்கு முன் தட்சணாமூர்த்தி பொறுப்பேற்றார். நேற்று காலை, மேற்கு கோபுர தெருவை சேர்ந்தவர்கள், 'எங்கள் பகுதியில் சில நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை; இதை சரி செய்ய வேண்டும்' என, நகராட்சி கமிஷனரின் மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எவ்வித பதிலும் கூறாமல், போன் இணைப்பை நகராட்சி கமிஷனர் துண்டித்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திடீரென அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை டவுன் போலீசார், அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ