மேலும் செய்திகள்
பள்ளி மாணவனுடன் திருமணம்: கல்லுாரி மாணவி மீது வழக்கு
9 hour(s) ago
மகளை காதலித்த வாலிபரை அடித்து கொன்ற தந்தை சரண்
25-Oct-2025
மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது
21-Oct-2025
கிணற்றில் மூழ்கி கபடி வீரர் பலி
20-Oct-2025
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, தை மாத வளர்பிறை பிரதோஷ பூஜையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தை மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' 'ஓம் நமச்சிவாய' என, பக்தி கோஷம் எழுப்பியும், சிவ வாத்தியங்களை இசைத்தும் வழிபட்டனர்.
9 hour(s) ago
25-Oct-2025
21-Oct-2025
20-Oct-2025