உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

ஆரணி:ஆரணி அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி சித்ரா, 36; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஏழுமலை அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். சுவற்றுக்கு சித்ரா தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். நேற்று வழக்கம்போல் சுவர் மீது ஏறி நின்று, தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பியில் நீர் பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை