உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 46 கிலோ சுறா துடுப்பு பறிமுதல்

46 கிலோ சுறா துடுப்பு பறிமுதல்

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணியரையும், அவர்களின் உடமைகளையும் வான் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்ட, 46 கிலோ சுறா துடுப்புகள் கடத்த இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.அதே போல், முறையான ஆவணங்கள் இல்லாமல், வெளி நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற, 6.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ மற்றும் சிங்கப்பூர் கரன்சிகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பயணியரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை