உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு

ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு

திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 57. இவர், 2019ல் ஒரு திருமண நிகழ்வில், பெரம்பலுார் மாவட்டம், சிறுவயலுார் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரைசந்தித்தார். சென்னை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவதாக கூறிய அவர், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, சண்முகத்திடம், 15 லட்சம் ரூபாய் பெற்றார். அதன் பின், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் மணிவண்ணன் ஏமாற்றினார். இதனால், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சணமுகம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, மண்ணச்சநல்லுார் போலீசார், மணிவண்ணனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை