உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்

பாலத்தின் நடுவே டூ - வீலர் சாகசம்

திருச்சி:திருச்சியில், கடந்த 23ம் தேதி, பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், திருச்சிக்கு வந்து, பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். சில இளைஞர்கள் மாநகரப் பகுதியில், போக்குவரத்து நிறைந்த பகுதிகளில், டூ - வீலர்களில் பேரணியாக வந்து கோஷம் போட்டனர். அதில், ஒரு இளைஞர், கொள்ளிடம் பாலத்தின் நடுவே உள்ள சிமெண்ட் தடுப்பு கட்டை மீது டூ - வீலர் வாகனத்தை ஓட்டி சாகசம் செய்துள்ளார். அதனை மொபைல் போனில் வீடியோ எடுத்தும் வைரலாக்கி உள்ளனர். சதய விழாவையொட்டி, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும், இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் டூ - வீலர் ஓட்டி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை