மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
திருச்சி : நாட்டின், 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகரத்தில், பா.ஜ., கட்சியின் இளைஞரணி சார்பில், மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து, வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி, வ.வே.சு.அய்யர் வீடு வரை, டூ-- - வீலர்களில் பேரணியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மாநகர போலீசார் அனுமதி மறுத்தனர்.அதனால், வாகன பேரணியை விலக்கிக் கொண்ட, பா.ஜ.,வினர், திருச்சி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பினர். மாநில இளைஞரணி செயலர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செயலர் கவுதம் நாகராஜன், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தேசியக் கொடிகளுடன் ஊர்வலமாக கிளம்பினர். அரசு மருத்துவமனை, மதுரம் மருத்துவமனை, எம்.ஜி.ஆர்., சிலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று, மீண்டும் பா.ஜ., அலுவலகத்திற்கு திரும்பினர். இதுகுறித்து, பா.ஜ., இளைஞரணி மாநில பொதுச்செயலர் கவுதம் நாகராஜன் கூறியதாவது:டூ-வீலர் பேரணி நடத்த அனுமதி கேட்டு, திருச்சி செஷன்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்தோம். அனுமதி மறுக்கப்பட்டதால், போலீஸ் தடையை மீறி ஊர்வலம் நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில், சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு கடுமையான கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
26-Dec-2025
16-Dec-2025 | 1