உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய தி.மு.க., பிரமுகர் லாரிகள் பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நேற்று வருவாய்த் துறையினர் நடத்திய சோதனையில், போலி ஆவணங்கள் வாயிலாக, கிராவல் மண் கடத்தி வந்த இரு டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., தொட்டியம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.விசாரணையில், லாரிகள் இரண்டும், தொட்டியம் அருகே மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் லோகேஷ், 40, என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்து, டிரைவர்கள் லோகேஷ் மற்றும் ரெங்கராஜன், 29, ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை