உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ரூ.10.33 லட்சம்  வெளிநாட்டு பணம் பறிமுதல்

ரூ.10.33 லட்சம்  வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி,:திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூர் செல்லும், ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரிடமிருந்து, 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஜப்பானிய் யென் மற்றும் யூரோ பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ