உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / எஸ்.பி.,க்கு மிரட்டல்; சிறுவன் மீது வழக்கு

எஸ்.பி.,க்கு மிரட்டல்; சிறுவன் மீது வழக்கு

திருச்சி : திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருப்பவர் வருண்குமார். இவர் தலைமையிலான போலீசார், சில மாதங்களுக்கு முன், ரவுடி கொம்பன் ஜெகனை, என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். அதற்கு பின், சமூக வலைதளத்தில், 'கொம்பன் ஜெகன் டீம்' என்ற ஐ.டி.,யில், திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், வாசகங்கள் பதிவு செய்யப்பட்டன.'கொம்பன் பிரதர்ஸ்' என்ற பெயரில் வெளியான பதிவு, திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்ததால், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, அவற்றை பதிவிட்ட, மண்ணச்சநல்லுார் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவனை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ