உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கிளாம்பாக்கம் போல மாறியுள்ளது திருச்சி ஏர்போர்ட் புதிய முனையம்

கிளாம்பாக்கம் போல மாறியுள்ளது திருச்சி ஏர்போர்ட் புதிய முனையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் வசதிக்காக, 1,110 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் கட்டப்பட்டது. அதை சில மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி திறந்து வைத்தார். எனினும் பணிகள் நிறைவடையாததால், செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் கடந்த, 11ம் தேதி முதல், புதிய விமான நிலைய முனையம் பயணியர் பயன்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர, 1.5 கி.மீ., உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரிவர செய்யப்படவில்லை என்று, பயணியர் கூறுகின்றனர். வெளியிலிருந்து புதிய முனையத்திற்குள் வரும் ஆட்டோக்களுக்கு, 80; டாக்சிகளுக்கு, 150 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது: லக்கேஜ்களுடன், 1.5 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால், மெயின் ரோட்டில் இருந்து புதிய முனையத்துக்கு, போதிய பஸ் வசதி செய்ய வேண்டும். அதேபோல, விமான நிலையப்பகுதியில் ஆட்டோ கட்டணத்தையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட்டிலும் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய பிரச்னை உள்ளது. அதேபோல தான், திருச்சி விமான நிலைய புதிய முனையத்துக்கும் உள்ளது.இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விமான நிலையத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் பஸ் வசதி கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜூன் 18, 2024 10:37

அரசு அதிகாரிகள் முன் யோசனையுடன் செயல்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்


Suresh Kesavan
ஜூன் 14, 2024 18:33

விமான நிலைய அதிகாரிகளே ஷட்டில் சேவை ஏற்பாடு செய்யலாமே... என்ன கேடு வந்தது ? ஏர்போர்ட் வரி என்று எவ்வளவு பணம் டிக்கெட்டில் வசூலிக்கிறார்கள்?


கனோஜ் ஆங்ரே
ஜூன் 14, 2024 12:50

பிளைட்ல வர்ற ஆளுங்களெல்லாம்... தினம் 150 ரூபாய் கூலி வாங்குற ஆட்களா....? சென்னை-திருச்சி ஆறாயிரம், எட்டாயிரம் ரூபாய் கொடுத்து பயணம் செய்யுறவனுங்க 150 ரூபாய் கொடுப்பதுல என்ன கஞ்சத்தனம். கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் பத்தி சொன்னீங்க, அது ஏற்றுக் கொள்ளக்கூடியதே... காரணம், அப்பேருந்துநிலையத்திற்கு கூலிக்காரன் முதல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வருவார்கள். அதை கேள்வி கேட்பது தப்பில்ல... ஆனால், பிளைட்ல வர்றவனுக்கு 150 ரூபாய் பெரிய பணமா...?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 15, 2024 22:03

வழக்கம் போல உன் பிதற்றலை கொட்டி இருக்கிறாய். விமானத்தில் வருபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல. வெளிநாட்டில் கடுமையாக உழைத்து விட்டு வீட்டுக்கு திரும்ப வரும் உழைப்பாளிகள் அதிகம், அவர்களுக்கு 150 ரூபாய் என்பது அதிகம் தான்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 14, 2024 12:47

எதையுமே முன்பே யோசிக்க மாட்டார்களா. நிர்வாக திறமையற்ற அதிகாரிகள் உள்ளதால் இவ்வாறு நடக்கிறது.


தமிழன்
ஜூன் 14, 2024 12:15

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட்/// போக்குவரத்து பிரச்சனையை குறைக்க என்று அரசு சொல்கிறது.. ஆனால் உண்மை அது இல்லை என்பது மக்களுக்கு தெரியும். /// அது சரி.. இப்போ நெரிசல் குறைந்து விட்டதா?


Ramesh Sargam
ஜூன் 14, 2024 11:55

பிரச்சினைகளை நேரடியாக ஒரு கடிதம் மூலம் அல்லது e-mail மூலம் சம்பந்தப்பட்ட துறை மந்திரிக்கும் மற்றும் துறை அதிகாரிக்கும் தெரிவித்து முடிவு காணலாம். அந்த கடிதத்தின் ஒரு காப்பியை பிரதமந்திரி அலுவலகத்துக்கும் அனுப்பவேண்டும். அப்பொழுது பிரச்சினை சீக்கிரம் சரிசெய்யப்படும். புலம்புவதால் ஒன்றும் ஆகாது.


Maheesh
ஜூன் 14, 2024 11:00

இந்திய கலாச்சாரத்தை குறிப்பாக திருச்சியில் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் கோபுரம் வைத்தது இங்கு இருக்கும் ஆளும் கட்சிக்கு பிடிக்காது அவர்கள் பஸ் விட மாட்டார்கள். மேலும் ஆட்டோ சங்கங்கள் டாக்ஸிகள் என அனைவரையும் வற்புறுத்தி இங்கு பிரச்சனைகளை உருவாக்குவார்கள்.


N Maheswaran
ஜூன் 14, 2024 10:47

இது அதிகமா தெரியல? ஏர்போரட்டும் பஸ் ஸ்டாண்டும் ஒன்றாகுமா???


sankar
ஜூன் 14, 2024 09:17

அவ்ளோ மோசமாகவா சார்


Kasimani Baskaran
ஜூன் 14, 2024 08:32

தமிழகத்தில் அணைத்து விமான நிலையங்களிலும் இரத்தம் உறிஞ்ச பல கோஷ்டிகள் காத்திருக்கிறார்கள். புதிதாக யாராவது வந்தால் தொலைந்தார்கள்...


முக்கிய வீடியோ