உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை திருச்சி கலெக்டர் உறுதி

ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை இல்லை திருச்சி கலெக்டர் உறுதி

திருச்சி : திருச்சியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற கலெக்டர் பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்படும். அந்த குழு, மாவட்டத்தில் உள்ள 434 பள்ளிகளில் இருந்து, போதை பொருள் புழக்கம் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த 'வாட்ஸாப்' மற்றும் கட்டணமில்லா எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொண்ட எட்டு குழுக்கள், தினமும் சோதனை நடத்தி வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை நிறுத்தும் வரை சோதனை தொடரும்.மேலும், மருத்துவமனை, ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகள் என, மெத்தனால் பயன்பாட்டுக்கு உரிமம் வழங்கப்பட்ட இடங்களில், முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்து, ஒரு துளி மெத்தனால் கூட வெளியே விற்பனை செய்யப்படவில்லை. உரிமம் இல்லாமல் நடத்தப்படும் மதுக்கூடங்கள், 'சீல்' வைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை