திருச்சி:திருச்சி தேசிய சட்டப்பள்ளி மாணவருக்கு மதுவில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரத்தில், இரண்டு சக மாணவர்கள் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், முத்துக்குளத்தில் தேசிய சட்டப்பள்ளி உள்ளது. இங்கு, ஐந்தாம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில் சிலர், கடந்த, 6ம் தேதி பர்த்டே பார்ட்டி நடத்தி உள்ளனர். அப்போது மது அருந்திய, இரு ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், மதுவில் சிறுநீர் கழித்து கொடுத்து, சக மாணவருக்கு கொடுத்தனர்.அவரும் பலமுறை அதை வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும், சிறுநீர் கொடுத்த இரண்டு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது புகாரின் பேரில், ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், இரு மாணவர்களும் அடுத்து வரவுள்ள, 10ம் பருவத்தேர்வை எழுத தடைவிதிக்க, தேசிய சட்டப்பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சி.பி.ஐ.,க்கு மாற்றுங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில், 31 பேரிடம் நடத்தப்பட்ட மரபணு சோதனை தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஓராண்டுக்கு முன் விசாரணை எந்த இடத்தில் துவங்கியதோ, அதே இடத்திற்கே மீண்டும் வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே பலரை, மரபணு சோதனைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல் துறை தப்பவிட்டு விட்டது. வழக்கில் காவல் துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அது அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.- ராமதாஸ்,பா.ம.க. நிறுவனர்
வேங்கைவயல் விவகாரம்
டி.என்.ஏ. மாதிரி சொதப்பல்புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனுார் அருகே, வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் எடுக்கப்பட்ட, டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை 31 நபர்களுக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இந்த விசாரணையை மீண்டும் மறுபடியும் முதலில் இருந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.