உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு

சட்ட மாணவருக்கு அவமதிப்பு சக மாணவர் 2 பேர் மீது வழக்கு

திருச்சி:திருச்சி மாவட்டம், முத்துக்குளத்தில் தேசிய சட்டப்பள்ளி உள்ளது. இங்கு, ஐந்தாம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களில் சிலர், கடந்த 6ம் தேதி பிறந்த நாள் விழா நடத்தினர். அப்போது மது அருந்திய, இரு ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், மதுவில் சிறுநீர் கழித்து, சக மாணவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இரு நாட்கள் கழித்து சிறுநீர் குடித்த விவகாரம் தெரிந்த, பாதிக்கப்பட்ட மாணவர், கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்; இரு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 12ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவர், தன் புகாரை வாபஸ் பெறுவதாக, கல்லுாரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தார்.ஆனாலும், பேராசிரியர்கள் அடங்கிய விசாரணைக்குழு தன் அறிக்கையை நேற்று முன்தினம் கல்லுாரி நிர்வாகத்திடம் அளித்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தேசிய சட்டப்பள்ளி பதிவாளர் பாலகிருஷ்ணன், ராம்ஜிநகர் போலீசில், சிறுநீர் விவகாரம் குறித்து புகார் அளித்தார்.அந்த புகாரின்படி, சிறுநீர் கலந்து கொடுத்த, ஐந்தாம் ஆண்டு சட்டம் படிக்கும் இரு மாணவர்கள் மீது, ராகிங் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை