மேலும் செய்திகள்
வனத்தில் மூன்று மான்களை வேட்டையாடிய கும்பல்
29-Dec-2025
துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே வ.கைகாட்டி என்னுமிடத்தில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த லோடு வேனின் பின்புறத்தில் டவேரா கார் மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் உடையார்விளையை சேர்ந்தவர் தாஸ் மகன் ஜெகநாதன்(33). இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்தவர் ஜமீல் மகன் சாதிக்(35). இவர்கள் இருவரும் ஜெகநாதனின் டவேரா காரில் சென்னை சென்று விட்டு, நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பினர். காரை செல்வராஜ் மகன் பிரகாஷ்(32) என்பவர் ஓட்டி வந்தார். இவர்களது கார் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வ.கைகாட்டி வரும்போது, சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் பஞ்சராகி நின்றிருந்த ஈச்சர் லோடு வேனின் பின்புறத்தில் மோதியது. இதில், ஜெகநாதன், சாதிக், பிரகாஷ் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இவர்கள் மூவருக்கும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, வளநாடு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பால்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
29-Dec-2025