மேலும் செய்திகள்
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
மணப்பாறை: மணப்பாறை பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸல் ஏற முயன்ற முதியவர் தவறிவிழுந்து பஸ் சக்கரம் ஏறியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் இறந்தார். மணப்பாறை அருகேயுள்ள பொன்னகோன்பட்டியைச் சேர்ந்தவர் நல்லபிச்சை கவுண்டர்(80). நேற்று முன்தினம் (11ம் தேதி) மாலை ஐந்து மணிக்கு மணப்பாறை பஸ் ஸ்டாண்டுக்கு வந்த இவர் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக பேரூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏற முயன்றுள்ளார். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் முன்படிக்கட்டில் ஏறிய நல்லபிச்சை தவறி கீழே விழுந்தார். அப்போது, அவரது கை மீது பஸ்ஸின் பின்புற சக்கரம் ஏறியது. இதில், காயமடைந்த நல்ல பிச்சை கவுண்டர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றிரவு 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி நல்லபிச்சை இறந்தார். இவ்விபத்து குறித்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் விசாரணை செய்து வருகிறார்.
26-Dec-2025
16-Dec-2025 | 1