உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மினி லாரி கவிழ்ந்து இருவர் காயம்

மினி லாரி கவிழ்ந்து இருவர் காயம்

மயிலம், : சென்னையிலிருந்து திருச்சி நோக்கி மினி லாரி ஒன்று மயிலம் அடுத்த தென்பசியார் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவரது தம்பி குணசேகரன் உடன் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் காயடைந்த ரஞ்சித்குமார், குணசேகரன் இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.விபத்தால் நெடுஞ்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து தடைபட்டது. மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை