உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கல்லுாரிக்கு பெற்றோர் வந்ததால் விரக்தியில் மாணவி தற்கொலை

கல்லுாரிக்கு பெற்றோர் வந்ததால் விரக்தியில் மாணவி தற்கொலை

திருச்சி : மாணவருடன் பேசிய பிரச்னைக்காக, கல்லுாரிக்கு பெற்றோர் வந்ததையறிந்த இன்ஜி., மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், விருதாச்சலம் அருகே ஊர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் தமிழரசி, 21. இவர், திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை அருகே சிவானி இன்ஜி., கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார்.இவர் அதே கல்லுாரியில் படிக்கும் மாணவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதை கண்டித்த கல்லுாரி நிர்வாகம், மாணவியின் பெற்றோரை கல்லுாரிக்கு வர சொல்லியுள்ளது.இதையடுத்து நேற்று மதியம், 12 மணிக்கு, தமிழரசியின் பெற்றோர், கல்லுாரிக்கு வந்துள்ளனர். இதை சக மாணவியரால் அறிந்த தமிழரசி விரக்தி அடைந்தார். உடன், கல்லுாரி விடுதி அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையறிந்த மாணவியின் பெற்றோர், விடுதி அறைக்கு சென்று மாணவியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சம்பவம் குறித்து இனாம் குளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ