உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கொள்ளிடத்தில் மூழ்கிய சிறுவன் உடல் 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கொள்ளிடத்தில் மூழ்கிய சிறுவன் உடல் 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

திருச்சி : திருச்சியில், கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமான சிறுவன் உடலை, 20 மணி நேரம் தேடலுக்கு பின், நேற்று காலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.திருச்சி, மேலப்புதுார் பகுதியைச் சேர்ந்த லுாதாஸ் என்பவரது மகன் சாம் ரோஷன், 15. அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் மதியம் திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில், நண்பர்களுடன் குளித்தார். அப்போது, ரோஷன் நீரில் மூழ்கி மாயமானதாக, நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்த 20க்கும் மேற்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியில் இருந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்ததால் சிறுவனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் நேற்று அதிகாலை 5:30 மணி முதல் சிறுவனை தேடத் தொடங்கினர். ட்ரோன் கேமரா மற்றும் ஆக்சிஜன் உதவியுடன், ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணி நடைபெற்றது.தீயணைப்புத் துறையினர் கடுமையான முயற்சியால், 20 மணி நேரத்துக்கு பின், நேற்று காலை 10:00 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஆழமான பள்ளத்தில் இருந்து சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இந்த தடுப்பணை பகுதியில், ஆபத்தான பள்ளங்கள் நீருக்குள் இருப்பதால், அங்கு எச்சரிக்கை அறிவிப்பு வைத்து, குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ