மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
திருச்சி:'திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள்' என, உட்பிரிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்., 25ம் தேதி, ஹிந்து சமய அறநிலையத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.நடவடிக்கை இல்லை
அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால், கிரையம் பெற்றவர்கள் சொத்தை வாரிசுதாரர்களுக்கு பெயர் மாற்றம், கிரையம் செய்ய முடியாமலும், சொந்த தேவைக்கு கூட அடமானம் வைத்து கடன் பெற, விற்க முடியாமலும் பரிதவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்கள், இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம், 5ம் தேதி, கலெக்டரிடம் மனு அளித்தனர். ஒரு மாதமாகியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நியாயமான கோரிக்கைக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த கூட, போலீசார் அனுமதி மறுக்கின்றனர். அதனால், நேற்று முன்தினம், மீண்டும் திருவானைக்காவல் கோவில் அடிமனை உரிமையாளர் கூட்டமைப்பு சார்பில், அடிமனை பிரச்னைக்கு தீர்வு காண கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதிர்ச்சி
அடிமனை பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், லோக்சபா தேர்தலில், தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நேரிடும் என, கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.இதுபோல, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியிலும் அடிமனை பிரச்னை உள்ளது. அங்குள்ள பிரச்னையே இன்னும் தீர்க்கப்படாத நிலையில், திருவானைக்காவலிலும் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14-Dec-2025
12-Dec-2025