| ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி, சோமரசம்பேட்டை, மஞ்சங்கோப்பு, மேலத்தெருவை சேர்ந்த விவசாயி மணி மனைவி தனலட்சுமி (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமையல் செய்வதுக்காக மண்ணெண்ணெய் அடுப்பை தனலட்சுமி பற்ற வைத்தார்.அப்போது, மண்ணெண்ணெய் கசிந்து, தனலட்சுமி புடவையில் தீப்பிடித்தது. அலறி துடித்த தனலட்சுமியை, வீட்டிலிருந்த மணி காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில், மணிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி தனலட்சுமி நேற்று காலை இறந்தார்.சோமரசம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.